பருத்தி ஆடைபோல காட்சியளிக்கும் பிளாஸ்டிக் ஆடைகள்.. தமிழகத்தில் இப்போது விற்பனையில்..!

பருத்தி ஆடைபோல காட்சியளிக்கும் பிளாஸ்டிக் ஆடைகள்.. தமிழகத்தில் இப்போது விற்பனையில்..!
வருடத்திற்கு 36 கோடி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு தொழில்நுட்ப வசதிகள் மூலம்  நூலாக மாற்றப்பட்டு, பின்னர் அதன் மூலம் நமக்கு தேவையான டீ சர்ட் பேண்ட் சர்ட் ஓவர்கோட் போன்ற அனைத்து உடைகளையும் வடிவமைத்து சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் காக்காகடி கிராமத்தில் இயங்கி வரக்கூடிய ஸ்ரீரங்கா பாலிமர் நிறுவனத்தின் நீண்டகால முயற்சியாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தினசரி நாம் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களை கொண்டு ஆடைகளைத் தயாரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதன்படி தினசரி 10 லட்சம் பாட்டில்கள் பல்வேறு கட்டங்களாக சேகரித்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி ஆடைகளை தயாரிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதாவது சராசரியாக வருடத்திற்கு 36 கோடி பாட்டில்கள் இதன் மூலம் மண்ணில் படாமல் மீண்டும் மறுசுழற்சி செய்யப்பட்டு ஆடையாக நமக்கு பயன்படுவதாகும் கூறுகின்றனர்.

சராசரியாக பருத்தி விலையை விட இது 20 சதவீதம் விலை அதிகமாக இருக்கும் என்றாலும் தரமான ஆடையாக நாம் பயன்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர் அந்த நிறுவனத்தின் மேலாளர் செந்தில்.

பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படக்கூடிய இந்த ஆடைகள் மாறிவிட்ட பிறகு மீண்டும் தங்களிடம் வழங்கினார். புதிய ஆடையாக வடிவமைத்து அதனை விற்பனை செய்ய முடியும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இந்த உடைகள் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கின்றனர். அதேபோல ஆறு பாட்டிலுக்கு ஒரு டி-ஷர்ட்டும் 15 பாட்டிலுக்கு ஒரு பேண்ட் என்ற விதத்தில் உருவாக்க முடிகிறது இதனால் அதிக ஆடைகளை தயாரிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.